இலங்கை பிரதான செய்திகள்

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் அதிகாிப்பு

சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாமல் தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடும் செயற்பாடுகள் அதிகரித்துள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை தேர்தலுடன் தொடர்புடைய 1950-க்கும் அதிக முறைப்பாடுகள்  தமக்கு  கிடைத்துள்ளதாகவும்  அதில் இத்தகைய முறைப்பாடுகளே அதிகமெனவும்    தேர்தல் கண்காணிப்பு அமைப்பான பப்ரல்     அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அதேவேளை தேர்தலுடன் தொடர்புடைய 685-க்கும் அதிக முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளதாக தேர்தல் முறைகேடு கண்காணிப்பு மத்திய நிலையத்தின் தேசிய இணைப்பாளர் மஞ்சுள கஜநாயக்க தெரிவித்துள்ளார்.

 மேலும் தேர்தல் பிரசாரங்களுடன் தொடர்புடைய 1460 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தேசிய தேர்தல்கள் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. #சுகாதார   #தேர்தல்பிரசார #பப்ரல்  #முறைப்பாடுகள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap