உலகம் பிரதான செய்திகள்

கொரோனா பரவலுக்கெதிரான கட்டுப்பாடுகளுக்கு எதிராக ஜெர்மனியில் போராட்டம்

ஜெர்மனியில் கடந்த ஏப்ரல் முதல் ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்ட போதும்  முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்ற விஷயங்கள் மக்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. எனினும் வைரஸ் பரவலுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள  கட்டுப்பாடுகளுக்கு ஜெர்மனி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் பெர்லினில் திரண்ட ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் , கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிரான வாசகங்கள் தாங்கிய பதாகைகளை ஏந்திய படி ஊர்வலமாக சென்றனர்.  கூட்டத்தில் ஒரு சிலர் தவிர யாரும் முகக்கவசம்அணியவில்லை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது
ஊர்வலத்தில் கலந்து கொண்ட சிலர் தமது சுதந்திரம் பறிக்கப்படுகிறது என கோசமிட்டுள்ளனா்.    இந்த ஊர்வலத்தில்  அரசியல்வாதிகள் உட்பட ஜெர்மனியின் பல பகுதிகளில் இருந்து வந்த  பலதரப்பட்ட மக்களும் கலந்து கொண்டுள்ளனர்.
  20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றதாக   தொிவிக்கப்படும் நிலையில்
கட்டுப்பாடு விதிகளுக்கு எதிராக போராட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டு    அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். #கொரோனா  #ஜெர்மனி #போராட்டம் #முகக்கவசம்   #கட்டுப்பாடுகள்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.