இந்தியா பிரதான செய்திகள் விளையாட்டு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக தோனி -சுரேஷ் ரெய்னா அறிவிப்பு

சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான மகேந்திரசிங் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா ஆகியோா் அறிவித்துள்ளனா்.

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியா முழுவதும் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐ.பி.எல். தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்று ஓரளவிற்கு கட்டுக்குள் வந்துள்ளதால், போட்டியை ங்கள் நாட்டில் நடத்தலாம் என அந்நாட்டு அரசு விருப்பம் தெரிவித்தது.

இதனையடுத்து , இந்த ஆண்டிற்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என ஐ.பி.எல். நிர்வாகம் அறிவித்திருந்தது.

அத்துடன் இந்தியன் பிரீமியர் லீக் ( ஐபிஎல்) போட்டிகள் செப்டம்பர் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நவம்பர் 8 ஆம் திகதி முடிவடையும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர் தோனி விளையாடுவார் என ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த நிலையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள மகேந்திரசிங் தோனி   தனக்கு ஆதரவு அளித்த ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரான டி டோனி டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும், ஒருநாள் மற்றும் 20 ஓவர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வந்தார்.

கடந்த ஆண்டு (2019) ஜூலை மாதம் முடிந்த ஒருநாள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாடிய விக்கெட் கீப்பர் டோனி அதன் பிறகு எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை.

2004ல் பங்களாதேஸ் அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் மூலம் தோனி அறிமுகமானார் .  39 வயதான தோனி , 350 ஒரு நாள் போட்டிகளிலும், 90 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார்.  தோனி 350 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 10,773 ஓட்டங்களையும் 98 ாி20 போட்டிகளில் விளையாடி 1,617 ஓட்டங்களையும் , 90 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4,876 ஓட்டங்களையும் சேர்த்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது

இந்தநிலையில் தோனியை தொடர்ந்து சுரேஷ் ரெய்னாவும்  சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

முழு மன நிறைவுடன் தோனி வழியை தேர்ந்தெடுப்பதாக சுரேஷ் ரெய்னா அறிவித்துள்ளார்.   சுரேஷ் ரெய்னா 226 ஒருநாள் போட்டிகள், 78டாி20 மற்றும் 19 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.  226 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள சுரேஷ் ரெய்னா 5617 ஓட்டங்களைப் பெற்றுள்ளாா். #சர்வதேசகிரிக்கெட்போட்டி #தோனி #ரெய்னா #ஓய்வு #கொரோனா

Related Tags :

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.