இந்தியா கட்டுரைகள் பிரதான செய்திகள்

நித்தியானந்தாவின்.. “கைலாசா”வும் அம்பலமாகும் ரகசியங்களும்!


கைலாசா நாட்டில் ரிசர்வ் வங்கி உருவாக்கப்பட்டு விட்டது.. பணம் தயாராகி விட்டது.. எல்லாவற்றையும் விநாயகர் சதுர்த்தியன்று வெளியிட போவதாக அறிவித் நித்தியானந்தா நாணயங்களையும் வெளியிட்டு ஒரு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.


ஆனால் நித்தியானந்தாவின் இந்தக் கற்பனைக் கைலாசாவுக்குள் ஏகப்பட்ட சிக்கல்கள் மறைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

குறிப்பாக கைலாசா என்பது ஒரு நாடே அல்ல.. மாறாக பல கம்பெனிகளையும், அரச சார்பற்ற அமைப்புகளையும் (NGO) அமைப்புகளையும் உள்ளடக்கியதே, நித்தியானந்தாவின் இந்தக் கற்பனை நாட்டின் நிஜம் என்பதை இந்தியா ருடே அம்பலப்படுத்தியுள்ளது.


அதாவது பல்வேறு நிறுவனங்களையும், என்ஜிஓ அமைப்புகளையும் இணைத்துக் கொண்டு அதை ஒரு நாடு போல கற்பனையாக உருவாக்கி மக்களிடம் புதுத் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளார் நித்தியானந்தா. இதனையே இந்தியா ருடே விரிவான கட்டுரை ஒன்றில் வெளிப்படுத்தி உள்ளது அதில் நித்தியானந்தாவின் “நிகழ்ச்சி நிரலையும்” தெளிவுபடத்தி உள்ளது.


கைலாசா என்பது தனி நாடாக நித்தியானந்தா தரப்பினர் வடிவமைத்துள்ள ஒரு கருத்துருவாக்கம். ஆனால் உண்மையில் அப்படி ஒரு நிலப்பரப்பு எங்குமே இல்லை. முற்றிலும் கற்பனையான நாடே இந்தக் கைலாசா. இந்தக் கைலாசவுக்குள் என்ன இருக்கிறது என உற்றுப் பார்த்தால் முற்றிலும் கற்பனைக்கும் எட்டாத திட்டங்களைத் உருவாக்கி வைத்துள்ளார் நித்தியானந்தா.
3 கண்டங்களில் பரவிக் கிடக்கும் பல்வேறு நிறுவனங்கள், அரச சார்பற்ற அமைப்புகளை உள்ளடக்கிய இந்த கைலாசா, அவரால் உருவாக்கப்பட்ட நிறுவனங்களின் கூட்டமைப்பாகும். இந்த நிறுவனங்கள்தான் கைலாசாவின் அடித்தளமாகும். இதையே உலகின் மாபெரும் டிஜிட்டல் இந்து தேசம் என நித்தியானந்தா கூறிக் கொண்டிருக்கிறார்.


பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கி தலைமறைவாகிய நித்தியானந்தா எங்கிருக்கிறார் என இதுவரை அறியப்படவில்லை. இந்தியாவை வெளியேறியதாக கூறப்படுகிறது. ஈகுவடாரில் தலைமறைவாகி இருப்பதாகவும், அங்கு ஒரு தீவை வாங்கியதாகவும் முன்பு செய்திகள் வெளியாகின. ஆனால் அதனை ஈகுவடார் நாடு திட்டவட்டமாக மறுத்திருந்தது. அடைக்கலம் கேட்டார், ஆனால் அது மறுக்கப்பட்டு வெளியேற்றி விட்டோம் என ஈகுவடார் தெளிவுபடுத்தி விட்டது.
இந்த நிலையில் தனது நாட்டின் ரிசர்வ் வங்கியையும், கரன்சியையும், பொருளாதார திட்டத்தையும் விநாயகர் சதுர்த்தியன்று அறிமுகப்படுத்த போவதாக கூறிய நித்தியானந்தா அதனை வெளியிட்டதாக வலைத்தளங்களில் செய்திகளை வெளியிட்டுள்ளார்.

இது பலரையும் திரும்பி பார்க்க வைத்த நிலையில் அமெரிக்கா, இங்கிலாந்து, ஆசிய நாடுகளில் 13 நிறுவனங்களையும், அரச சார்பற்ற அமைப்புகளையும் நித்தியானந்தா உருவாக்கியுள்ளார். கடந்த ஒரு வருட காலகட்டத்திற்குள் இவை உருவாக்கப்பட்டுள்ளன. சமூக பொருளாதார அமைப்புகள் என்ற பெயரில் இவற்றை அந்தந்த நாடுகளின் சட்ட திட்டங்களுக்கேற்ப நித்தியானந்தா உருவாக்கியுள்ளார். இந்த நிறுவனங்கள் மூலமாக நிதி சேகரிப்பை நடத்தியுள்ளார். பெருமளவில் நிதியும் கிடைத்துள்ளது. இதனை அடிப்படையாகக் கொண்டே அண்மையில் அவர் வெளியிட்ட காணொளியில், ” மக்கள் உலகம் முழுவதிலுமிருந்து எனக்கு தாராளமாக நிதியுதவி செய்து வருகின்றனர். உள்ளூர் அரசுகளுடன் இணைந்து நாங்கள் இவற்றை ஒருங்கிணைத்துள்ளோம். இந்தப் பணத்தின் மூலமாக எங்களது ரிசர்வ் வங்கியை உருவாக்கியுள்ளோம்” எனக் கூறியிருந்தார்.


இந்த அமைப்புகளை உருவாக்கியபோது “ இந்து மதத்தை பின்பற்றுவோரின் அதிகாரப்பூர்வ அமைப்பாக எங்களது கைலாசா செயல்படும்” என அந்தந்த நாடுகளின் அரசுகளிடம் இவர்கள் அளித்த வாக்குறுதியின் அடிப்படையில் மத ரீதியான அங்கீகாரத்தை நித்தியானந்தாவின் அமெரிக்க குழுமம் பெற்று வைத்துள்ளது.


அமெரிக்காவில் பல இடங்களில் இந்தக் குழுமத்திற்கு அமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. குறைந்தது 10 அமைப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது. இவை அனைத்தும் அரசசார்பற்ற நிறுவனங்கள் மற்றும் பொது நல அமைப்புகளைக பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஹவாய் தீவில் கைலாசா ஒன் ஹவாய் தீவு என்ற பெயரில் ஒரு அமைப்பை பதிவு செய்துள்ளனர். அதேபோல இந்த அமைப்புடன் சான் ஜோஸ், மிச்சிகன், மின்னசோட்டா, பென்சில்வேனியா, பிட்ஸ்பர்க், டென்னஸி, டல்லாஸ், ஹூஸ்டன், சியாட்டில் ஆகிய மாநிலங்களில் உருவாக்கப்பட்ட அமைப்புகளையும் இணைத்துள்ளனர். சனாதன தர்மத்தைப் பின்பற்றுவோருக்கான சுயாட்சியான தேசம் என்று கூறி இவற்றைப் பதிவு செய்துள்ளனர்.

இந்த அமைப்புகள் அனைத்தயைும் யுனைட்டெட் ஸ்ரேற்ஸ் ஒவ் கைலாசா அதாவது நித்தியானந்தா தியானபீடத்தின் மறு பெயராக அந்த அமைப்புடன் ஒருங்கிணைத்துள்ளனர்.


அதேபோல கடந்த ஆண்டு ஹொங்ஹாங்கில் ஸ்டான்லி தெருவில் உள்ள வேர்ல்ட டிரஸ்ட் ரவரை முகவரியாக கொண்டு கைலாசா லிமிட்டெட் என்ற நிதி அமைப்பு ஒன்றைப் பதிவு செய்துள்ளனர்.கடந்த ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் 2 மத ரீதியிலான அமைப்புகளைப் பதிவு செய்துள்ளனர். இந்த நாடுகளில் இப்படி அமைப்புகளை உருவாக்கிய பின்னரே இவை அனைத்தையும் கைலாசா நாடு என்று உருவகப்படுத்தி நித்தியானந்தா பேச ஆரம்பித்துள்ளார்.


இதேவேளை நாணய வெளியீடு பற்றிய அறிவிப்பிலும் தனது ஏமாற்று மூளைத்திறனை நித்தியானந்தா பயன்படுத்தி உள்ளார்.. அதாவது பல நாடுகளில் complementary currencies அதாவது கெளரவப் பணம் என்று ஒன்றை அனுமதித்துள்ளனர். அதாவது குறிப்பிட்ட பிரிவினர், அமைப்பினருக்கு இடையே மட்டும் புழக்கத்தில் கொள்ளக் கூடிய கரன்சி இது. அதேபோல private currency என்ற தனியார் பணத்திற்கும் அனுமதி உண்டு. இதுவும் மேலே குறிப்பிட்டது போன்ற மாதிரியே. இதுவே கைலாசாவின் கரன்சி என என நித்தியானந்தா அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளார்.


மேலைநாடுகளின் சட்டங்களுக்கு அமைவாக கைலாசா குழுவினர் ஒரு நாணயத்தை அச்சடித்துக் கொள்ளலாம். இதற்கான டிசைனை அமைத்துக் கொடுக்க பல நிறுவனங்கள் இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளில் செயற்படுகின்றன.. இந்தப் பணத்தை இந்த கைலாசாவில் உறுப்பினராக இருக்கும் நித்தியானந்தாவின் மொழியில் சொல்வதானால், கைலாசா குடிமக்கள், தாராளமாக பயன்படுத்திக் கொள்ள முடியும். இதை மேல்நாட்டு சட்டங்கள் அனுமதிக்கின்றன.
எனினும் இந்தியாவில் இவ்வகையான நாணயங்களுக்கு அனுமதி இல்லை. பிரித்தானியாவில் பிரிஸ்டல் பவுண்ட், லூயிஸ் பவுண்ட் என கெளரவ கரன்சி அமலில் உள்ளன. இவற்றை சில குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் பயன்படுத்தி வருகின்றனர். ஏறத்தாள பிட் காயின் போலவே இவையும்.


நித்தியானந்தாவைப் பொறுத்தவரை, கைலாசா நாடு என எந்த ஒரு பூமிப் பரப்பையும் காட்டவில்லை. காரணம் அப்படி ஒன்று நிஜத்தில் இல்லை. நிறுவனங்களை உருவாக்கி அவற்றி ல் நித்தியானந்தா பணத்தை சேர்த்து வைத்துள்ளார்.. இதுவே கைலாசா!
நன்றி – இந்தியா ருடே

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap