இந்தியா பிரதான செய்திகள்

தமிழகத்தில் இ-பாஸ் ரத்து

வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து விமானம், புகையிரதம் மற்றும் இதர வாகனங்கள் மூலம் தமிழ் நாட்டிற்குள் நுழைய இ-பாஸ் நடைமுறை தொடரும் என அறிவித்துள்ள தமிழக அரசு தமிழகம் முழுவதிலுமுள்ள மாவட்டங்களுக்கிடையே இ-பாஸ் இன்றி பொது மக்கள் பயணிக்க அனுமதித்துள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக மார்ச் மாத இறுதியில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டது முதல், அவசர தேவைகளுக்காக வெளி மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு பயணிக்க இந்த இ-பாஸ் முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

எனினும் மாவட்டங்களுக்கு மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான ஆட்கள் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு எந்தவிதமான அனுமதியும் தேவை இல்லை என இந்திய உள்துறை அமைச்சு அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது #இ-பாஸ் #தமிழகம் #கொரோனா #ஊரடங்கு

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap