
பிாித்தானியாவின் பேர்மின்ஹாம் பகுதியில் இடம்பெற்ற கததிக்குத்து தாக்குதலில் பலா் காயமடைந்துள்ளதாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
பிாித்தானியாவின் இங்கிலாந்தில் உள்ள அதிக மக்கள் நெருக்கடி கொண்ட இரண்டாவது பெரிய நகரமான பேர்மின்ஹாமில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சுமாா் 12.30 அளவில் பெரிய அளவில் இந்தக் கத்தி குத்து தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுளதளாக காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.
பேர்மின்ஹாம் பகுதியில் உள்ள சிற்றிசென்டர் என்னும் இடத்தில் வீதியில் சென்ற பொதுமக்கள் பலா் மீது இனந்தொியதோா் இவ்வாறு கத்தி குத்து தாக்குதல் நடத்தியதாக மிட்லாண்ட் காவல்துறையினரால் தொிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கத்தி குத்தின் போது பலர் படுகாயம் அடைந்துள்ளனர் எனவும் எனினும் குறிப்பாக எத்தனை பேர் காயமடைந்துள்ளனா் எனும் விபரம் முழுமையாக தொியவில்லை எனவும் தொடா்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல்துறையினா் தொிவித்துள்ளனா். #பிாித்தானியா #பேர்மின்ஹாம் #கததிக்குத்து

Add Comment