Home இலங்கை கிளிநொச்சியில் இளைஞர் -யுவதியின் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சியில் இளைஞர் -யுவதியின் சடலங்கள் மீட்பு

by admin

கிளிநொச்சி பொியபரந்தன், ஓசியர் சந்திப் பகுதியில் இளைஞர் ஒருவரதும் யுவதி ஒருவரதும் சடலங்கள்  மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினா் தெரிவித்துள்ளனர்.

கிளிநொச்சி பரந்தன் குமரபுரம் பகுதியைச் சேர்ந்த  28 வயதான சுசிதரன் என்னும் இளைஞனும், இரத்தினபுரம் கிராமத்தைச் சேர்ந்த 27 வயதான தனுஷியா என்னும் யுவதியுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

கடந்த சில நாட்களாக இருவரும் காணாமல் போயிருந்த நிலையில் . இன்று (10) காலை தூக்கில் தொங்கிய நிலையில் இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனா்.

சடலமாக மீட்கப்பட்ட யுவதி கடந்த சில நாட்களுக்கு முன் பட்டதாரி நியமனம் பெற்றவர் எனவும் இளைஞர் இலங்கை மின்சார சபையில் ஒப்பந்தப் பணியில் ஈடுப்பட்டவர் எனவும் தொிவித்துள்ள கிளிநொச்சி காவல்துறையினா் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனா். #கிளிநொச்சி #இளைஞர் #யுவதி #சடலங்கள் #காணாமல்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More