இலங்கை பிரதான செய்திகள் மலையகம்

முச்சக்கரவண்டி விபத்து – ஏழு பேர் காயம்

(க.கிஷாந்தன்)

நுவரெலியா – ஹட்டன் வீதியில் பத்தனை சந்தியிலுள்ள பேருந்து தரிப்பிடத்தில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று (13.09.2020) பிற்பகல் 3.30 மணியளவில் மோதுண்டு விபத்துக்குள்ளானதில்  பாடசாலை மாணவர்கள் மூவர் உட்பட ஏழுபேர் காயமடைந்துள்ளனர்.

முச்சக்கரவண்டியில் பயணித்த மூவரும், பேருந்துக்காக பேருந்து தரிப்பிடத்தில் காத்திருந்த நால்வருமே காயமடைந்த நிலையில் சிகிச்கைகளுக்காக கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அக்கரபத்தனையிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்துக்கொண்டிருந்த முச்சக்கரவண்டியே இவ்வாறு வேகக்கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து தரிப்பிடத்தில் மோதுண்டு இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளனது.

அவ்வேளையில் பேருந்து தரிப்பிடத்தில் பேருந்துக்காக காத்திருந்த பாடசாலை மாணவர்கள் மூவரும், பெண்ணொருவரும் காயமடைந்துள்ளனர்.

இவ்விபத்தால் பேருந்து தரிப்பிடத்துக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது, திம்புள்ள – பத்தனை காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #முச்சக்கரவண்டி #மாணவர்கள் #விபத்து #பேருந்து

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap