இலங்கை பிரதான செய்திகள்

கலையரசனை கனடா நாட்டு உயர் ஸ்தானிகர் சந்தித்து பேச்சு

தமிழ் தேசிய கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரான தவராசா கலையரசனை இலங்கைக்கான  கனடா நாட்டு  உயர் ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன்( High Commissioner to Canada in Sri Lanka David McKinnon)  சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

குறித்த சந்திப்பானது அம்பாறை மாவட்டம் நாவிதன்வெளி பகுதியில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் உத்தியோக பூர்வ வாசஸ்தலத்தில் இன்று(14) முற்பகல் இடம்பெற்றது.

இதன் போது அம்பாறை மாவட்டத்தில் எதிர்வரும் காலங்களில் இடம்பெறும் அபிவிருத்தி திட்டங்கள் அரசியல் நிலமைகள் தொடர்பாக விரிவாக ஒரு மணித்தியாலம் கலந்துரையாடப்பட்டது.

அத்துடன் குறித்த சந்திப்பு இடம்பெற முன்னர் அப்பகுதியில் காவல்துறையினாின் பாதுகாப்பு நாடாளுளுமன்ற உறுப்பினரின் வாசஸ்தலத்தை சுற்றி அதிகளவில்  போடப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

குறித்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர்  தவராசா கலையரசன்

அம்பாறை மாவட்டத்திற்கு தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் வழங்கப்பட்டமை தொடர்பில் எமது கட்சிக்கு நன்றி தெரிவித்தார்.எதிர்காலத்தில் இம்மாவட்டத்தில் இடம்பெற உள்ள நிலைமைகளை அறிந்து நடவடிக்கை எடுப்பதாக கூறி இருந்தார்.

இதனால் இவர்களுடன் இணைந்து எமது மாவட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கு எமக்கு கடப்பாடு உள்ளது.நம்பிக்கை தரக்கூடிய சந்திப்பாக இக்கலந்துரையாடல் இருந்தது.ஆரோக்கியமாக இருந்து சந்திப்பு  எமது மக்களின் எதிர்காலத்தை மிகவும் கட்டியெழுப்பும் என நம்புகின்றேன் என்றார். #தவராசாகலையரசன் #கனடா #உயர்ஸ்தானிகர் #சந்தித்து #அம்பாறை

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.