
அண்மைய நாட்களில் கண்டியின் குண்டசாலை, பன்வில மற்றும் வத்தேகம உள்ளிட்ட சில பகுதிகளில் உணரப்பட்ட நிலஅதிர்வுகள் குறித்து தொடர்பிலான விசாரணைகள் மேற்கொள்ள மூவர் கொண்ட குழு நியமிக்கப்படவுள்ளதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகத்தின் தலைவர் அனுர வல்பொல தெரிவித்துள்ளார்.
இதற்காக பேராதனை மற்றும் மொறட்டுவ பல்கலைக்கழகங்களின் கலாநிதிகள் மற்றும் பேராசிரியர்களை இணைத்துக் கொள்ளவுள்ளதாகவும் அவர் தொிவித்துள்ளாா்.
தமது 04 மத்திய நிலையங்களில் அதிர்வுகள் பதிவானதாக புவிசரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. #கண்டி #குண்டசாலை #விசாரணை #நிலஅதிர்வு
Add Comment