இலங்கை

விக்டர் சுந்தர் மீது வாள்வெட்டு

வன்முறைக் கும்பலைச் சேர்ந்த விக்டர் சுந்தர் மீது மற்றொரு கும்பலால் வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கால்கள் மற்றும் கைகளில் படுகாயமடைந்த விக்டர் சுந்தர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று காலை 7 மணியளவில் யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்றது என்று காவல்துறையினா் தெரிவித்தனர்.

யாழ்ப்பாணம், நாயன்மார்க்கட்டு பகுதியைச் சேர்ந்த விக்டர் சுந்தர், பல்வேறு வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என காவல்துறையினரால் தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவர் இன்று காலை கல்வியங்காடு பகுதியில் நின்ற போது, மூன்று மோட்டார் சைக்கிள்களில் வந்த மற்றொரு கும்பல், அவர் மீது வாள்வெட்டுத் தாக்குதலை மேற்கொண்டுவிட்டுத் தப்பித்துள்ளது.

சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். #விக்டர்சுந்தர் #வாள்வெட்டு #வன்முறைக்கும்பல் #கல்வியங்காடு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.