இலங்கை பிரதான செய்திகள்

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின் 150 ஆவது நிறைவு நிகழ்வு டிசம்பர் 3 ஆம் திகதி

மன்னார் புனித சவேரியார் ஆண்கள் தேசிய பாடசாலையின்  150 ஆவது யூபிலியை நிறைவு செய்யும் முகமாக இறுதி நிகழ்வுகள் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி (03-12-2020) நடாத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அப்பாடசாலையின் முதல்வர் அருட்.சகோ.ச.இ.றெஜினொல்ட் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,,,,,
எமது கல்லூரித் தாய் ஜனனமாகி 150 ஆவது அகவையினை நாம் அனைவரும் மகிழ்ச்சியாகக் கொண்டாடி நினைவு கூரும் வகையில் பல செயற்பாடுகளை கடந்த வருடத்தில் இருந்து மேற்கொண்டு வருகின்றோம் என்பதை யாவரும் அறிவீர்கள்.


 எமது கல்லூரியின் 150 வது நிறைவு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பல இதர நிகழ்வுகள், தற்போது உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கோவிட் தொற்று நோய் காரணமாக நிறுத்;தப்பட்டுள்ளன. 


அதேவேளை, இந்த வரலாற்று ரீதியான நன்;றி கூறும் இறுதி நிகழ்வை நாம் கருத்துள்ளதாகவும் எளிமையாகவும் நடாத்த தீர்மானித்துள்ளோம். 


இந்ந வருடம் டிசம்பர் மாதம் 3ஆம் திகதி (03-12-2020) எமது 150 ஆவது யூபிலியை நிறைவு செய்யும் முகமாக இறுதி நிகழ்வுகள் நாடத்தப்பட உள்ளன.  இந்நிகழ்வின் போது 150 ஆது யூபிலி நினைவு மலர் ஒன்றையும் நாம் வெளியிட திட்டமிட்டுள்ளோம். 


யூபிலி மலர் முழுமையானதாகவும் கருத்தாக்கம் உள்ளதாகவும் அமைவதற்கு உங்கள் அனைவரது காத்திரமான ஒத்துழைப்பு மிகவும் அவசியமாக உள்ளது. பல நண்பர்கள்  தங்களிடம்  உள்ள சில படங்களை ஏற்கனவே கல்லூரி சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளீர்கள். இவை நிச்சயமாக உங்கள் அனைவரது பழைய இனிமையான கல்லூரி நினைவுகளை ஞாபாகம் ஊட்டி மகிழ்ச்சி அடைய செய்கின்றன. 


இப்படியான படங்கள், மற்றும் கருத்தாளம் மிக்க ஆக்கங்கள் என்பவற்றை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம். 


இவைகளை யூபிலி நினைவு இதழில் பதிவிட விரும்புகின்றோம். ஆகவே தங்கள் வசம் உள்ள புகைப்படங்கள் மற்றும் உங்களால் எழுதப்பட்ட தரமான அனுபவ பகிர்வுகள், மற்றும் ஆக்கங்களை கீழ்வரும் மின்னஞ்சல் முகவரிக்கு அருட்சகோதரர் யோகன் அவர்களுக்கு அனுப்பி வைக்குமாறு அன்பாக கேட்டு நிற்கின்றோம்.
 ஆக்கங்களை தமிழ் மொழியிலும் விரும்பியவர்கள் ஆங்கில மொழியிலும் எழுதி அனுப்பலாம். தயவு செய்து உங்கள் ஆக்கங்களை A4  அளவிலான ஒரு பக்கத்தில் உள்ளடக்கியதாக எழுதி எதிர்  வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதிக்கு முன்பாக (31-10-2020) எமக்குக் கிடைக்கும் படியாக அனுப்பி வைக்கவும். 
மேலதிக விபரங்களுக்கு  0773824255,0718296105 என்ற தொலைபேசி இலக்கத்திற்கும், [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியுடன் தொடர்பு கொள்ள முடியும்.
உங்கள் அனைவரதும் அன்பானதும், தொடர்ச்சியானதுமான ஒத்துழைப்பையும் உதவிகளையும் எதிர்பார்த்து நிற்கின்றோம். என அவர் மேலும் தெரிவித்தாா். #மன்னார்புனிதசவேரியார் #தேசியபாடசாலை #யூபிலி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap