இலங்கை பிரதான செய்திகள்

அம்பாறையில் துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்பு

அம்பாறை மாவட்டத்தில் இரு வேறு இடங்களில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கைளின் போது துப்பாக்கி உட்பட தடைசெய்யப்பட்ட கத்திகள் மீட்கப்பட்டுள்ளது.

சம்மாந்துறை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் கிழக்கு  சலாம் பள்ளி  பகுதியில் கைவிடப்பட்ட காணி ஒன்றில் ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக  விசேட அதிரடிப்படையினருக்கு இன்று(22) முற்பகல் கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய உரைப்பை ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டு புதைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் கத்தி என்பன மீட்கப்பட்டுள்ளன.

இதேவேளை கல்முனை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட கிறீன் பீல்ட் பகுதியில் வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கத்திகள் இரண்டு மீட்கப்பட்டுள்ளதுடன் சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபர் ஒருவர் கைதானார்.

கைதான சந்தேக நபரை கல்முனை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. #அம்பாறை #துப்பாக்கி #தடை #கத்திகள் #மீட்பு

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.