
நல்லாட்சி அரசாங்கத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களாக இருந்த சிலர் இன்று (24.09.20) அரசியல் பழிவாங்கல் தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகவுள்ளனர்.
அதனடிப்படையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர். சம்பந்தன் மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுர குமார திஸாநாயக்க, மங்கள சமரவீர, பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஹக்கீம், சரத் பொன்சேகா மற்றும் மலிக் சமரவிக்கிரம ஆகியோரே இவ்வாறு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகவுள்ளனர்.
இதேவேளை வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக பதில் காவற்துறைமா அதிபர் சி.டீ விக்ரமரத்ன இன்று பிற்பகல் 2 மணிக்கு ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் முன்னிலையாகவுள்ளார்.
Spread the love
Add Comment