இந்தியா பிரதான செய்திகள்

இந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் கொரோனாவுக்கு பலி

இந்திய மத்திய புகையிரத துறை இணையமைச்சர் சுரேஷ் அங்காடி கொரோனா தொற்று காரணமாக நேற்று (செப்டம்பர் 22) உயிாிழந்துள்ளாா். .

65 வயதான சுரேஷ் அங்காடிக்கு செப்டம்பர் 11ஆம் திகதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிாிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனாலும் சிகிச்சை பலனளிக்காமல் நேற்று இரவு காலமாகியுள்ளாா்.

கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் அங்காடி அங்குள்ள பெலகாவி தொகுதியில் இருந்து நான்காவது முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக தொிவு செய்யப்பட்டிருந்தாா்.

கடந்த மாதம் தமிழகத்தின் மக்களவை உறுப்பினர் வசந்தகுமார் கொரோனா தொற்றால் காலமான நிலையில். இந்த மாதம் கர்நாடகாவைச் சேர்ந்த சுரேஷ் அங்காடி உயிரிழந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இதுவரை இந்தியாவில் கொரோனாவில் நான்கு நாடாளுமன்ற உறுப்பினா்கள் உயிாிழந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது. #இந்திய #புகையிரததுறை #இணையமைச்சர் #கொரோனா #பலி #சுரேஷ்அங்காடி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap