உலகம் பிரதான செய்திகள்

சீனாவில் விசவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் பலி

சீனாவில் நிலக்கரி சுரங்கத்தில் விசவாயு தாக்கியதில் 16 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். கனிம வளங்கள் நிறைந்த சீனாவில் அதிகளவான நிலக்கரி மற்றும் தங்க சுரங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் பல சுரங்கங்கள் அனுமதி இல்லாமலும் பாதுகாப்பு அம்சங்கள் ஏதுமில்லாது ஆபத்தான சூழலிலும் இயங்குகின்றன.

இதனால் அங்கு அடிக்கடி சுரங்க விபத்துகள் ஏற்படுவதுடன் ஆண்டுதோறும் 100-க்கும் மேற்பட்ட சுரங்கத் தொழிலாளர்கள் பலியாகி வருகின்றனர்.

உலகிலேயே சீனாவில் தான் மிகவும் மோசமான மற்றும் அதிக அளவிலான சுரங்க விபத்துகள் ஏற்படுவதாக புள்ளிவிவரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தநிலையில் சீனாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள குய்சோ மாகாணம் கிஜியாங் மாவட்டத்தில் உள்ள தனியார் நிலக்கரி சுரங்கத்தில் நேற்று காலை 30-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நிலக்கரியை வெட்டி எடுக்கும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது சுரங்கத்துக்குள் கார்பன் மோனாக்சைடு வாயு அளவுக்கு அதிகமாக வெளியேறியது.

இதனை சுவாசித்த சுரங்கத் தொழிலாளர்கள் கடும் மூச்சுத் திணறலுக்கு உள்ளாகினா்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்ட போதிலும் விசவாயு தாக்கி 16 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். . அதே சமயம் 10-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மயங்கிய நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில்ி அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது. #சீனா #விசவாயு #தொழிலாளர்கள் #பலி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap