பிரதான செய்திகள் விளையாட்டு

பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் – திம்- செரீனா வெற்றி

பாாிசில் நடைபெற்றுவரும் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஒஸ்ரிய வீரர் டொமினிக் திம் மற்றும் அமெரிக்க வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் ஆகியோர் வெற்றி பெற்றுள்ளனர்

2-வது நாளான நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று போட்டி ஒன்றில் அமெரிக்க ஓபன் சம்பியனும், உலக தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவருமான ஒஸ்ரிய வீரர் டொமினிக் திம் 6-4, 6-3, 6-3 என்ற நேர்செட்டில் 7-ம் நிலை வீரரான மரின் சிலிச்சை (குரோஷியா) வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளாா்.

அதேவேளை பெண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றறுப் போட்டியில் தரவரிசையில் 11-வது இடத்தில் இருக்கும் கிவிடோவா (செக்குடியரசு) 6-3, 7-5 என்ற நேர்செட்டில் பிரான்ஸ் வீராங்கனை ஓசியன் டோடினை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னனேறியுள்ளாா்.

இன்னொரு போட்டியில் 8-ம் நிலை வீராங்கனையான கிகி பெர்டென்ஸ் (நெதர்லாந்து) 2-6, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை காதரினா ஜவாத்ஸ்காவை வெ்னறுள்ளாா்.

மற்றொரு போட்டியில் முன்னாள் முதல்தர வீராங்கனையான செரீனா வில்லியம்ஸ் (அமெரிக்கா) 7-6 (7-2), 6-0 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை கிறிஸ்டியை தோற்கடித்து 2-வது சுற்றுக்கு முன்னனேறியுள்ளாா். #பிரெஞ்ச்ஓபன்டென்னிஸ் #டொமினிக்திம் #செரீனாவில்லியம்ஸ் #வெற்றி

.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link