Home இலங்கை பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து – 49 பேர் காயம்

பேருந்து பள்ளத்தில் பாய்ந்து விபத்து – 49 பேர் காயம்

by admin

(க.கிஷாந்தன்)

டயகமவிலிருந்து போடைஸ் வழியாக ஹட்டன் நோக்கி பயணித்த தனியார்   பேருந்து  ஒன்று டயகம ஹட்டன் பிரதான வீதியில் போடைஸ் என்.சி தோட்டப் பகுதியில் குடைசாய்ந்துள்ளது.

டயகம பகுதியிலிருந்து பயணிகளை ஏற்றிக் கொண்டு ஹட்டன் பகுதிக்கு சென்ற குறித்த பேருந்து இன்று ( 02.10.2020 )காலை 7 மணியளவில் பாதையை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்தில் பேருந்தில் பயணித்த 49 பேர் படுங்காயங்களுக்குள்ளாகியுள்ளனர்.

பேருந்து சாரதியின் கவனயீனம் காரணமாகவே இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்த 49 பேரில் ஒருவர் பேராதெனிய வைத்தியசாலைக்கு, மாற்றப்பட்டுள்ளதாகவும், ஏனையோர் டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

இவ்வாறு காயமமைந்தவர்களில் 24 பேர் பாடசாலை மாணவர்களும் அடங்குகின்றனர் என  வைத்தியசாலை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

இவ்விபத்து தொடர்பில் ஹட்டன் காவல்துறையினா் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். #பேருந்து #பள்ளத்தில் #விபத்து #காயம் #மாணவர்கள்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More