இந்தியா பிரதான செய்திகள்

இந்திய கடற்படை விமானம் விபத்து -இருவா் பலி

கேரள மாநிலம் கொச்சி அருகே இன்று காலை பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விழுந்து நொறுங்கியதில் இருவா் உயிரிழந்துள்ளனர் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது

கொச்சி அருகே வழக்கம்போல் இன்று காலை 7மணி அளவில் கடற்படைக்குச் சொந்தமான கிளைடர் பயிற்சி விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது, கடற்படைத் தளத்துக்கு அருகே இருக்கும் தொப்பும்பாடி பாலத்தின் அருேக பயிற்சி விமானம் திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்தத் தகவல் கிடைத்தவுடன் உடனடியாக மீட்புப்படையினர் சென்று விமானத்தில் சிக்கியிருந்த லெப்டினெட் அதிகாரி ராஜீவ் ஜா, மற்றொரு அதிகாரி சுனில் குமார் ஆகியோரை மீட்டு, சஞ்சீவானி ராணுவ மருத்துவமனைக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டனர் ஆனால், அங்கு கொண்டு சென்றபோது ஏற்கெனவே இருவரும் இறந்துவிட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. இந்த விமான விபத்து தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என இந்திய பாதுகாப்புத்துறை செய்தித்தொடர்பாளர் தொிவித்துள்ளாா்.

காலையில் நடைபயிற்சிக்குச் சென்றவர்கள் விமானம் விபத்துக்குள்ளானதைப் பார்த்து துறைமுகத்துக்கு தகவல் தெரிவித்தபின்பு, அவர்கள் மூலம்தான் விமானப்படைத்தளத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேலும், அங்கிருந்து ராணுவ நோயாளா் காவுவண்டி வாகனம் வருவதற்கும் தாமதமாகியதால், இருவீரர்களையும் காப்பாற்ற முடியாமல் போனதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளதாகவும் தொிவிக்கப்படுகின்றது #இந்திய #கடற்படை #விமானம் #விபத்து #பலி #கொச்சி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.