உலகம் பிரதான செய்திகள்

பின்லாந்தில் ஒரு நாள் பிரதமரான சிறுமி

பின்லாந்துப் பிரதமர் 16 வயது சிறுமி ஒருவரை ஒரு நாள் பிரதமராக்கும் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளாா்

பின்லாந்தில் பிரதமரான 34 வயதான சன்னா மரின் அங்கு ஆண், பெண் பாலின இடைவெளியை முடிவுக்கு கொண்டு வரும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளாா்..

அந்த வகையில் அவர் ஒருபடி மேலே போய் 16 வயது சிறுமியான ஆவா முர்டோ என்பவரை நேற்று முன்தினம் ‘ஒரு நாள்’ பிரதமர் ஆக்கி, பிரதமர் நாற்காலியில் உட்கார வைத்துள்ளாா்.

ஆவா முர்டோவுக்கு சட்டம் இயற்றும் அதிகாரம் வழங்கப்படாதபோதும், அவர் அந்த ஒரு நாளில் தொழில்நுட்பத்தில் பெண்களின் உரிமைகளை முன்னிலைப்படுத்த பல்வேறு அரசியல்வாதிகளை சந்தித்துள்ளார்.

கடந்த 11ம்திகதி கொண்டாடப்பட்ட சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தினையொட்டி ஆவா முர்டோ ஒரு நாள் பிரதமர் பதவியை வகித்துள்ளார்.

சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தையொட்டி, பிளான் இன்டர்நஷனல் அமைப்பு பெண் குழந்தைகளுக்கு அதிகாரம் என்ற திட்டத்தின்கீழ், உலகம் முழுவதும் ஒரு நாள் அரசியல் மற்றும் பிற துறைகளின் தலைமைப்பதவிக்கு பெண் குழந்தைகள் வருவதற்கு அனுமதித்துள்ள நிலையில் பின்லாந்தில் 4-வது ஆண்டாக இது பின்பற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது #பின்லாந்து #பிரதமர் #சிறுமி #சன்னாமரின் #ஆவாமுர்டோ

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.