இலங்கை பிரதான செய்திகள்

பட்டித்தோட்டம் – பெரிய கடை கிராமங்கள் முடக்கப்பட்டன-

மன்னார் மாவட்டத்தின் பட்டிதோட்டம் மற்றும் பெரியகடை ஆகிய பிரதேசங்கள் மறு அறிவித்தல் வரையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் குறித்த பிரதேசங்கள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

பட்டித்தோட்டம் – பெரிய கடை கிராமங்கள் முடக்கப்பட்டன-

மன்னாரில் பட்டித்தோட்டம், பெரிய கடை கிராமங்கள் முடக்கப்பட்டுள்ளதாக, இன்று (11.10.20) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த, மன்னார் மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.குணபாலன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக மன்னார் மாவட்டத்தில் நேற்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பீ.சி.ஆர். பரிசோதனையின் முடிவுகளுக்கு அமைவாக மன்னார் பட்டித்தோட்டம் கிராமத்தில் 5 பேருக்கும், மன்னார் பெரிய கடை பகுதியில் ஒருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 90 பேர் வரை பீ.சி.ஆர்.பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இராணுவம் மற்றும் காவற்துறையினரின் உதவியுடன் குறித்த இரு கிராமங்களும்,முடக்க நிலையில் இருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

உயர் தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு இலங்கை அரச போக்குவரத்து சேவை பேரூந்துகள் போக்குவரத்திற்காக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும்,

முதலாவது போக்குவரத்து சேவையானது மன்னார் ஆயர் இல்ல வீதியில் இருந்தும், இரண்டாவது போக்குவரத்து சேவையானது மன்னார் டெலிக்கொம் சந்தியில் இருந்தும் காலை 8 மணிக்கு இடம் பெறும் எனவும் அறிவித்துள்ளார்.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap