இலங்கை பிரதான செய்திகள்

செல்வம் – டக்ளஸை சந்தித்தார்…


தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.


கடற்றொழில் அமைச்சின் அலுவலகத்தில் நேற்று (12.10.20) இந்த சந்திப்பு இடம்பெற்றதாகவும், இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாகவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில் 20 ஆம் திருத்தம் தொடர்பிலோ அல்லது 13 ஆம் திருத்தம் தொடர்பிலோ கலந்துரையாடப்படவில்லையெனவும், வன்னியில் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலேயே கலந்துரையாடியதாகவும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். #செல்வம் #டக்ளஸ் #20ஆம்திருத்தம் #மீனவர்கள்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap