பிரதான செய்திகள் விளையாட்டு

இத்தாலி போர்முலா வன் -ஹமில்டன் முதலிடம்

இத்தாலியில் நடைபெற்ற போர்முலா வன் கார் பந்தயத்தில் நடப்பு சம்பியனான இங்கிலாந்து வீரர் லுயிஸ் ஹமில்டன் முதலிடம் பிடித்துள்ளாா்.

இந்த ஆண்டுக்கான போர்முலா வன் கார் பந்தயம் 17 சுற்றுகளாக நடத்தப்படுகின்ற நிலையில் இதன் 13-வது சுற்றான எமிலியா ரோமக்னா கிராண்ட்பிரி பந்தயம் இத்தாலியின் இமோலா நகரில் நேற்று நடைபெற்றது.

309.049 கிலோமீட்டர் பந்தய தூரத்தை நோக்கி 10 அணிகளைச் சேர்ந்த 20 வீரர்கள் பங்கேற்ற நிலையில் லுயிஸ் ஹமில்டன் ஹமில்டன் (மெர்சிடஸ் அணி) 1 மணி 28 நிமிடம் 32.430 வினாடிகளில் இலக்கை கடந்து முதலிடம் பிடித்ததுடன் 26 புள்ளிகளையும் பெற்றுள்ளார்.

இந்த வெற்றியானது இந்தக் காலப்பகுதியில் இவா் பெற்ற 9-வது வெற்றியாகும். பின்லாந்து வீரர் வால்டெரி போட்டாஸ் (மெர்சிடஸ் அணி) 2-வதாக வந்து 18 புள்ளிகளை பெற்றார்.

13 சுற்று முடிவில் ஹமில்டன் 282 புள்ளிகளுடன் சம்பியன் பட்டத்தை நெருங்கியுள்ள மெர்சிடஸ் அணி (479 புள்ளி) தொடர்ந்து 7-வது முறையாக உறுதி அதனை உறுதிசெய்துள்ளது. போட்டாஸ் 197 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் உள்ளார்.

அடுத்த சுற்றுப் போட்டி எதிா்வரும் 15-ந் திகதி துருக்கியில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது #இத்தாலி #போர்முலாவன் #ஹமில்டன் #முதலிடம்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.