
மட்டக்களப்பு வெல்லாவெளி காவற்துறைப் பிரிவிலுள்ள ஆணைக்கட்டி வெளி வயல் காணி ஒன்றில் புதைத்துவைக்கப்பட்டிருந்த ரி56 ரக துப்பாகிமகசீன் 15, ரவைகள் 373, மகசீன் பாக் ஒன்று என்பன நேற்று (02.11.20) மீட்கப்பட்டுள்ளதாக வெல்லாவெளி காவற்துறையினர் தெரிவித்தனர்.
குறித்த மேட்டுநில காணியில் பயிரிடுவதற்காக நேற்று (02) காணி உரிமையாளர் ஒருவர் மாடுகளால் உழும் நடவடிக்கையிளை மேற்கொண்ட போது நிலத்தில் புதைதத்து வைக்கப்பட்டிருந்து இரு பொதிகள் வெளிவந்துள்ளதையடுத்து காவற்துறையினருக்கு தெரியப்ப டுத்தியுள்ளார்.
இதனையடுத்து காவற்துறையினர் சென்று அந்த பொதியை சோதனையிட்டபோது அதிலிருந்து ரி56 ரக துப்பாகி மகசீன் 15, ரவைகள் 373, மகசீன் பாக் ஒன்றை மீட்டனர்.
இது தொடர்பான விசாரணைகளை வெல்லாவெளி காவற்துறையினர் மேற்கொண்டுவருகின்றனர்
Spread the love
Add Comment