பிரதான செய்திகள் விளையாட்டு

பாரீஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் -மெட்விடேவ் சம்பியனானாா்

பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று வரும் பாரீஸ் மாஸ்டர்ஸ் சர்வதேச டென்னிஸ் போட்டியில் ரஸ்ய வீரர் மெட்விடேவ், சம்பியன் கிண்ணத்தினைக் கைப்பற்றியுள்ளாா்.

நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7-ம் நிலை வீரரான அலெக்சாண்டர் ஸ்வெரேவுடன் போட்டியிட்ட தரவரிசையில் 5-வது இடத்திலுள்ள மெட்விடேவ் போட்டியின் முடிவில் 5-7, 6-4, 6-1 என்ற செட்டில் வென்று கிண்ணத்தினைக் கைப்பறியுள்ளாா்.

பாரீஸ் மாஸ்டர்ஸ் கிணத்தினை வென்ற 4-வது ரஸ்ய வீரர் என்ற பெருமையை பெற்ற 24 வயதான மெட்விடேவுக்கு 2 கோடி ரூபா பரிசுத்தொகையுடன், ஆயிரம் தரவரிசை புள்ளிகளும் கிடைத்துள்ளது.

அதேவேளை 2-வது இடம் பிடித்த ஸ்வெரேவ் 1¼ கோடி ரூபா பரிசும், 600 தரவரிசை புள்ளிகளும் பெற்றுள்ளாா் #பாரீஸ் மாஸ்டர்ஸ் #மெட்விடேவ் #சம்பியன் #டென்னிஸ்

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.