Home இலங்கை தமிழும் ஈழத்தமிழும் (Tamil and Eezham Tamil)

தமிழும் ஈழத்தமிழும் (Tamil and Eezham Tamil)

by admin

தமிழும் ஈழத்தமிழும் (Tamil and Eezham Tamil) என்ற தலைப்பில், பேராசிரியர் ஆ. வேலுப்பிள்ளை (1936 – 2015) அவர்கள் எழுதிய ஓர் bஅறிமுகத்தை, தமிழ்நெற் அமேசனூடாக படங்களுடனான ஒரு கையேடாக வெளிக்கொணர்ந்திருக்கிறது.

ஈழத்துத் தமிழியல் ஆய்வை பன்முகத்துறைகளில் ஆற்றுப்படுத்தி, குறிப்பாக தமிழ் ஆங்கிலம் என்ற இரு மொழிப் புலமைப் பாரம்பரியம் ஒன்றைத் தோற்றுவித்த பேராசிரியர் க கணபதிப்பிள்ளையின் (1903 – 1968) மாணாக்கர்களில் ஒருவரான ஆ வேலுப்பிள்ளை குறித்த பாரம்பரியத்தின் இதர பேராசியர்களான கைலாசபதி, சிவத்தம்பி, இந்திரபாலா, பத்மநாதன், சண்முகதாஸ் ஆகியோரின் சமகாலத்தவர். ஆரவாரமின்றி ஆழமான ஆராய்ச்சிகள் பலவற்றைச் செய்தவர்.

1997ஆம் ஆண்டில் தமிழ்நெற் (TamilNet.com) தனது ஆங்கிலச் செய்திச் சேவையை ஓர் இணையத் தளமாக வெளிக்கொணரும் தருணத்தில் ‘பண்பாடும் மொழியும்’ என்ற ஒரு சிறப்புப் பகுதிக்கான அறிமுகம் ஒன்றைத் தொகுத்தளிக்குமாறு பேராசிரியர் வேலுப்பிள்ளையை அணுகியபோது, அதற்காக அவர் எழுதிய தொகுப்பே தற்போது ஒரு கைநூல் வடிவம் பெற்றிருக்கிறது.

வேலுப்பிள்ளையின் இந்த அறிமுகம் தனது ஊடகக் கொள்கைவகுப்பிற்கும் பயன்பட்ட ஒன்று என்று தமிழ்நெற் குறிப்பிட்டிருக்கிறது.

மறைந்த பேராசிரியர் வேலுப்பிள்ளையின் வெளியீடுகள், வெளிவராத ஆய்வுகள் பற்றிய தொகுப்புகளையும் சுவீடன் நாட்டைச் சேர்ந்த பேராசியர் பீற்றர் சால்க், நூலாசிரியர் பற்றி எழுதிய குறிப்போடும் 102 பக்கங்களுடன் வெளிவந்திருக்கும் இந்த நூல் தமிழ் மொழியைப் பற்றியும் ஈழத்தமிழின் மொழிப்பாரம்பரியத்தையும் அறிந்துகொள்ள விரும்புவோர்க்கு ஓர் அரிய அறிமுகமாகும்.

குறிப்பாக இளம் தலைமுறையினருக்கும் தமிழையும் ஈழத்தமிழையும் பற்றி அறிய விரும்பும் ஏனையோருக்கும் எளிமையாக, அதேவேளை ஆய்வுநிலைசார்ந்து, தகவல்களைத் தருகின்ற ஓர் அறிமுகமாக மட்டுமல்ல, கல்விக்கான ஓர் உசாத்துணை நூலாகவும் இது பயன்படவல்லது.

அமேசனில் கொள்வனவு செய்ய பின்வரும் இணைப்பை அழுத்துக:
URL: https://www.amazon.com/dp/8293531002/

Spread the love
 
 
      

Related News

1 comment

DrKandiah Sundaralingam November 11, 2020 - 10:38 am

I know Prof A. Velluppillai while he was a staff in the Peradeniya University. He is a very simple, genuine senior friend & very intellectual. Countries situation made us to move to different places.

Reply

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More