
உலகின் மிகவும் அரிதான பிங்க் நிற ரஸ்ய வைரக்கல் ஒன்று சுவிட்சர்லாந்தில் 26.6 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது. எனினும் இதனை ஏலம் எடுத்த நபரின் பெயர் விபரம் வெளியிடப்படவில்லை
பிங்க் நிற வைரக்கற்கள் பொதுவாக 10 கரட்களுக்குள் தான் இருக்கும் என்றபோதிலும் தற்போது ஏலம் விடப்பட்டுள்ள இந்த வைரம் மிகவும் அரிதாக 14.8 கரட் வைரக்கல் ஆகும்.
அதன் அளவு, நிறம் மற்றும் அமைப்பு ஆகியவையே இந்தக்கல் இவ்வளவு விலைபோக காரணம் எனத் தொிவிக்கப்படுகின்றது.
2017ஆம் ஆண்டு ரஸ்யாவில் கண்டுபிடிக்கப்பட்ட அல்ரோசா என்ற ரஸ்ய சுரங்க நிறுவனத்துக்கு சொந்தமான இந்த வைரக்கல்லிற்கு, ரஸ்ய – போலாந்து பலே நடனக்கலைஞரான நிஜின்ஸ்கி என்பவரது பெயரிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #பிங்க்நிறவைரக்கல் #டொலர் #ஏலம் #பிங்க்நிறவைரக்கல் #pinkdiamond
Spread the love
Add Comment