இலங்கை பிரதான செய்திகள்

இலங்கையில் முடக்கம் நடைமுறைக்கு வரவுள்ள காவற்துறைப் பிரிவுகள்…

கொழும்பு மாவட்டத்தில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள 12 காவற்துறைப் பிரிவுகளுக்கு மேலதிகமாக மருதானை, கோட்டை, புறக்கோட்டை, கொம்பனித்தெரு மற்றும் டேம் வீதி ​ஆகிய காவற்துறைப் பிரிவுகள் நாளை (16) அதிகாலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் களனி காவற்துறைப் பிரிவும் நாளை காலை 5 மணி முதல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு ஜா-எல, ராகமை, கடவத்த, வத்தளை, மற்றும் பேலியகொடை ஆகிய காவற்துறைப் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த காவற்துறைப் பிரிவுகளை தவிர்ந்த, கம்பஹா மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களில் தனிமைப்படுத்தல் நிலை இன்று (15) காலை 5 மணி முதல் நீக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap