இலங்கை உலகம் பிரதான செய்திகள்

பிரித்தானியாவின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கையும் இணைக்கப்பட்டது…

Sri Lanka has been added to the list of travel corridors
(Getty Images/iStockphoto)

பிரித்தானியாவின் பாதுகாப்பான பயணப் பட்டியலில் இலங்கையும் நேற்று (19.11.20) சேர்க்கப்பட்டுள்ளது.

அத்துடன், இஸ்ரேல் மற்றும் உருகுவே ஆகிய நாடுகளும் இந்த பட்டியில் இணைக்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த வாரம் எந்த நாடுகளும் பாதுகாப்பான பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை என பிரிட்டிஷ் போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, நமீபியா, ருவாண்டா, பொனெய்ர், செயின்ட் யூஸ்டேடியஸ் & சபா, வடக்கு மரியானா தீவுகள் மற்றும் யு.எஸ். வெர்ஜின் தீவுகள் ஆகிய நாடுகளில் இருந்து சனிக்கிழமை முதல் இங்கிலாந்துக்கு வரும்போது சுயமாக தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

#பிரித்தானியா #பாதுகாப்பானபயணப்பட்டியல்

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap