இலங்கை பிரதான செய்திகள்

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளை விடுவிக்கப்படுகின்றன

முடக்கப்பட்டுள்ள பகுதிகளில் சில நாளை விடுவிக்கப்படவுள்ளதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

நாளை காலை 5 மணி முதல் கொழும்பு மாவட்டத்தில் பொரள்ள, வெல்லம்பிட்டிய, கோட்டை மற்றும் கொம்பனிதெரு ஆகிய பகுதிகளும் கம்பஹா மாவட்டத்தில் ஜாஎல மற்றும் கடவத்த பகுதிகளும் முடக்கத்திலிருந்து விடுவிக்கப்படவுள்ளதாக அவா் தெரிவித்துள்ளார்.

அதேவேளை கொழும்பு மாவட்டத்தில் 13 காவல்துறைப் பிரிவுகளும் கம்பஹா மாவட்டத்தில் 5 காவல்துறைப்பிரிவுகளும் தொடர்ந்தும் முடக்கத்தில் இருக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். #முடக்கப்பட்டுள்ள #சவேந்திரசில்வா #கொழும்பு #கம்பஹா

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.