
வேலியை மறைப்பாய்க் கண்டனர் மனிதர்
வேலியை எல்லையாய்ப் போட்டனர் மனிதர்
வேலியில் இயற்கையை விளைத்தனர் மனிதர்
வேலியில் கலைநயம் காட்டினர் மனிதர்
வேலியில் பெருமையை நிறுத்தினர் மனிதர்
வேலியைத் தொல்லையாய்க் கொண்டனர் மனிதர்
வேலியில் பல்லுலகம்
வேலியால் நல்வாழ்வு
வேலியால் தகராறு
வேலியால் வெட்டுக்கொத்து
வெட்டி அழித்தனர்
வேலியை
கட்டி முடித்தனர்
மதிலை
மனிதர் கண்ட வேலியில்;
மனிதர் வடித்த கலையை
மனிதர் வளர்த்த இயற்கையை
மரஞ்செடி கொடிகளுடன்
வேலியில்
மனிதர் வளர்த்த பகையை
மதிலைக்கட்டி முடித்தனரோ?
பசுமை வேலியைப் பாடத்தில் படித்தவர்
இணையத்தில் தேடினர் முகநூலில் பகிர்ந்தனர்
விருப்பும் பகிர்வும் விறுவிறென்று ஏறியது
ஆரறிவார்
வேலி அறியாத்
தலைமுறையின் கனவு.
சி.ஜெயசங்கர்
Spread the love
Add Comment