இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சந்திவெளிக் கலைஞர்களின் கொரோனா கூத்து–சில குறிப்புக்கள் சுந்தரலிங்கம் சஞ்சீபன்.


ஒரு இனமானதுகாலம் கடந்தும் வாழ்ந்துகொண்டிருக்கின்றதுஎன்றால் அவ் இனத்தின் பண்பாட்டுப் பாரம்பரியங்கள்; தொடர்ந்துசந்ததிஈர்ப்பின் ஊடாககடத்தப்பட்டுஅதுபேணப்பட்டுவருகின்றமையேகாரணமாகும்.
தமிழர்கள் மிகநீண்டகாலங்களாகவாழ்ந்துவருபவர்கள். தனித்துவம் வாய்ந்தபண்பாட்டைகொண்டவர்கள்.மொழி, இலக்கியம்,கலைபோன்றதுறைகளில் கிறிஸ்துவுக்குமுந்திய நூற்றாண்டுகளிலேயேஉயர்நிலைஎட்டி இருந்தவர்கள். இயல், இசை,நாடகம் எனும் முத்தமிழில் ஒன்றானநாடகத்தைமுன்னிறுத்திதொன்றுதொட்டுதமிழர் நாடககலையில் ஈடுபட்டுவருகின்றனர். தொல்காப்பியம்,சிலப்பதிகாரம் ஆகிய நூல்களில் நாடகம் பற்றியகுறிப்புக்கள் காணப்படுவதினைநாம் வரலாற்றுஆதாரங்களுடன் அறியமுடிகின்றது.அந்தவகையிலேதமிழர்களின் பாரம்பரியகலைவடிவங்கள் ஆதிகாலத்திலேயேவேரூன்றப்பட்டுவிட்டது. அக்கலைகள் எத்தனை நூற்றாண்டுகாலம் கடந்தாலும் அத்தளத்தில் இருந்தேபேணப்பட்டுவரும் என்பதில் எவ்விதமாற்றுகருத்துக்கும் இடம் இல்லை. தமிழர்களின் ஆற்றுகைக்கலைமரபுகளில் மிகபிரதானமானது கூத்துக்கலைவடிவமாகும்.இக் கலைமரபானதுகுறிப பாகஈழத்திலேதமிழர்கள் வாழும் இடமெல்லாம் ஆடப்பட்டுக்கொண்டேவருகின்றது.
இன்றைய 21ஆம் நூற்றாண்டிலேநாம் வாழ்ந்துகொண்டிருக்கின்றோம். கலைசார்ந்துமேல்நாட்டுகலைமரபுகள் அரங்கமரபுகள் எனப்பலஅறிமுகப்படுத்தப்பட்டாலும் மக்கள் அதனை இரசிக்கமுனைந்தாலும் கூட எமதுபாரம்பரியகலைகளைமறைப்பதும் இல்லைமறப்பதும் இல்லை. அதனைக்கொண்டேதமது ஆற்றுகைகளை ஆற்றிக்கொண்டிருக்கின்றார்கள்.
அந்தவகையிலேஆரம்பகாலம் தொடக்கம் இன்றையகாலம் வரைபல கூத்துக்களைஅரங்கேற்றி,பல்துறைசார் கலைஞர்களின் ஆற்றுகைகள் ஆற்றப்பட்டு,சைவமும் தமிழும் தழைத்தோங்கும்,பண்பாட்டுப்பாரம்பரியங்களை இன்றும் பேணிப்பாதுகாத்து இன்றையதலைமுறையினரைசிறந்தகலைஞர்களாகபடைத்துவரும்ஈழத்தின் சந்திவெளிஎனும் ஊரிலேஉள்ள மூத்தகலைஞர்கள் மற்றும் இளையகலைஞர்கள் இணைந்து இன்றைய சூழலில் பரவிக்கொண்டிருக்கும் கொடியநோயானகொரோனாதொடர்பாககொரோணாவிழிப்புணர்வுஎனும் கூத்துசாயல் கொண்டதானஒருஆற்றுகையினைநிகழ்த்தியுள்ளார்கள்.
கொரொனாவால் மக்கள் அவதியுறுவதையும் அதுதொடர்பானசிறந்தவிழிப்புணர்வைவழங்கும் நோக்கத்துடனும் எமதுகலைஞர்களால் இந்தஆற்றுகைஉருவாக்கப்பட்டது.
தென்மோடிசாயலில் பாடல்களைஉருவாக்கிஅதற்கேற்றதானஆட்டக்கோலங்களைபழகிஅதனைமறுநாள் காலைமக்கள் கூடும் இடங்களுக்குசென்றுஆற்றுகைசெய்தனர்.


இந்தஆற்றுகையின்கதைச்சுருக்கம் -எமதர்மராஜன்,இந்திரமகாராஜன்,சித்திரபுத்திரனார்பூமியில் மக்கள் அவதியுறுவதைஅறிந்து இக்கொடியநோயில் இருந்துமக்களைக்காப்பாற்றுவதற்காகஎமதர்மராஜன் சித்திரபுக்தனாரிடம் சுகாதாரஒழுங்குவிதிகளானமுகக்கவசம் அணிதல்,சமூக இடைவெளியைபேணுதல்,கைகளைகழுவுதல் மற்றும் ஏனைய விதிமுறைகளைகடைப்பிடிக்காதவர்களைகணக்கெடுத்துதரும்படியும் இவர்களைஎமலோகம் கொண்டுசெல்லபோவதாகவும்; கூறுவார். அதற்குநான் அப்படியேசெய்கின்றேன் என்று கூறி விதிமுறைகளைபேணாதவர்களிடம் சென்றுஎமதர்மராஜன் கூறியதை கூறுவார். அச்சமயத்தில் இந்திரமகாராஜன் வந்து இல்;;;;லைஅவ்வாறுசெய்யத்தேவை இல்லைநான் அவர்களுக்குஅறிவுரை கூறுகின்றேன். மக்கள் அவ் வழிமுறைகளைபின்பற்றுவார்கள் என்று கூறி மக்களைமுகக்கவசம் அணியும் படியும் சமூக இடைவெளிகளைபின்பற்றுமாறும் கைகளைகழுவிசுத்தபடுத்துமாறும் மற்றும் ஏனைய விதிமுறைகளையும் பின்பற்றுமாறும் அவதானத்துடன் இருக்குமாறும் அறிவுரை கூறுவார்.
பொதுவாக இதுதிறந்தவெளிஅரங்கினிலேநிகழ்த்தப்பட்டது. இதில் எமனாகபாக்கியராசாகரிசுதன்அவர்களும், இந்திரனாகஇராசரெத்தினம் அச்சுதன்அவர்களும்,சித்திரபுத்தினாகபாலிப்போடிதவராஜாஅவர்களும் ஆற்றுகைசெய்திருந்தனர்.
இவ்வாற்றுகையில் அண்ணாவியார் ஆறுமுகம் இரரசரெத்தினம்,பாலிப்போடிகமலநாதன்,சுக்குறுசாமித்தம்பி,கந்தசாமிநிமலதாசன் ஆகியகலைஞர்களும் பங்குபற்றியிருந்தார்கள்.

இக்கலைஞர்கள் இவ் ஆற்றுகையின் மூலமாகபாரம்பரியக் கலைகளைக் கொண்டுஎவ்விதமானஆற்றுகைகளையும் மேற்கொள்ளமுடியும் என்பதனையும் கூறவரும் விடயத்தினைஎமதுபாரம்பரியமுறைமைகளினூடாகசொல்லும்வேளையிலேஎம்மவரைசிந்திக்கவைக்கவும் அவர்களைநம்பிக்கையின் பால் வழிப்படுத்தவும் முடியும்ஏன்பதனையும் நிருபித்துக் காட்டியுள்ளனர்.

ஆற்றுகைகள் பலவிதமானவடிவங்களின் வழி வந்தாலும் கூட நம்மவரைவழிப்படுத்தநம் கலைகளைப் பயன்படுத்துவதுசாதகங்கள் நிறைந்ததுஎன்பதற்குசான்றாகசந்திவெளிக் கலைஞர்களின் இப்படைப்பானதுஅமைந்துள்ளது.இவ் ஆற்றுகையானதுசந்திவெளி,திகிலிவெட்டை,கிரான்,முறக்கொட்டான்சேனைபோன்ற இடங்களில் நிகழ்த்தப்பட்டது.கூத்தர்களின் ஆற்றுகையானதுமக்கள் கூட்டமாகச் சேரும்இடங்களுக்குஅருகில்சென்றுசமூக இடைவெளியைச்சுட்டிக்காட்டிசுகாதாரவிதிமுறைகளைபேணும் வண்ணம் நிகழ்த்தப்பட்டது. கலைஞர்கள் மோட்டார்சைக்கிள்களிலே ஊர் ஊராகசென்றுதமதுஆற்றுகையினைநிகழ்த்தினர்.இதில் சுகாதாரஅதிகாரிகளும் கலந்துகொண்டுமக்களைவிழிப்பூட்டினர். மக்கள் மிகவும் மகிழ்வான சூழலிலே இதனைகண்டுமகிழ்ந்தனர். இதன் பின்னரானமக்களின் கருத்துக்களின் அடிப்படையில் நோக்கும் போது இது முழுமையாகசென்றடைந்துள்ளமையைஅறியமுடிகின்றது. காரணம் நம் கலையில் உள்ளபற்றும் நம்பிக்கையுமேஆகும்.
ஆகவேநம் இனம் வாழவேண்டுமானால் நம் கலைகள் வாழவேண்டும் என்ற கூற்றிற்கிணங்கஎம் கலைகளும் கலைஞர்களும் எந்த சூழ்நிலையிலும் நம் கலைகளினூடாகவும் எம் பண்பாட்டின் ஊடாகவும் உள்வாங்கப்பட்டுசமகாலத்துக்குஏற்றவகையிலும் புதியபோக்குகளுக்குசமமாகசாதித்துகாட்டமுடியும் என்பதனையும் நிருபித்துஉள்ளனர்.
எனவேஒவ்;வொருபகுதிகளிலும் உள்ளகலைஞர்கள் இலைமறைகாயாக இருக்காமல் எம்மால் எதையும் வெல்லமுடியும் என்றஉறுதியுடன் எதிர்வரும் காலங்களில் எம் கலைக்கூடாகஎதையும் சாதிக்கலாம் எனும் முனைப்புடன் சந்;;;;;;;;திவெளிகலைஞர்;களின்முயற்சிகளைபோன்றுமென்மேலும் முயற்சிகளைமேற்கொண்டுஎம் கலைவளர இ;ளந்தலைமுறையினர் கைகோர்ப்பதுஅவசியமாகும்.

சுந்தரலிங்கம் சஞ்சீபன்
சந்திவெளி
மூன்றாம் வருடம்
நாடகமும் அரங்கியலும் சிறப்புகற்கை
நுண்கலைதுறை
கிழக்குப்பல்கலைகழகம் இலங்கை.

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link
Powered by Social Snap