
திடீரென மயங்கி விழுந்த கர்ப்பிணி தாயொருவர் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
வட்டக்கண்டல் அடம்பனை சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தயாரான ஜெயபாலன் மெரினாள் (வயது 43) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார்.
மடு கல்வி வலயத்தில் பணியாற்றும் இவர் கடந்த 20ஆம் திகதி திடீரென மயங்கி விழுந்துள்ளார். அதேவேளை இவருக்கு தலைச்சுற்று , வாந்தி காய்ச்சல் என்பனவும் இருந்துள்ளது.
அதனை அடுத்து மன்னார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டார்.
வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். #கர்ப்பிணிப்பெண் #மரணம் #யாழ்போதனாவைத்தியசாலை
Add Comment