உலகம் பிரதான செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனா உயிரிழப்பு 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது

அமெரிக்காவில் ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உலக அளவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகின்ற நிலையில் அங்கு தினசரி கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 


கடந்த இரு வாரங்களாக தினமும் 1 லட்சம் முதல் 2 லட்சம் வரையிலான நபர்களுக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகின்றநிலையில், ஒரே நாளில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்தைக் கடந்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 2 லட்சத்து 65 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.


மேலும், கொரோனாவால் 1.65 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிப்பு அடைந்துள்ளதனால் அங்கு பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1.30 கோடியை நெருங்கியுள்ள அதேவேளை
கொரோனாவில் இருந்து 76 லட்சத்துக்கும் மேற்பட்டோா் குணமடைந்துள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது #அமெரிக்கா #கொரோனா #உயிரிழப்பு

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.