
அரசாங்கத்தின் ஊடகப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெலவினால் தெரிவிக்கப்பட்ட கருத்து தொடர்பில் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும்அமைச்சருமான விமல் வீரவங்ச தனது எதிர்ப்பை வெளியிட்டுள்ளார்.
அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல அண்மையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அமெரிக்காவின் சோபா மற்றும் அக்ஸா ஒப்பந்தங்கள் தொடர்பில் கவனத்தில் எடுப்பதற்கு தயார் எனத் தெரிவித்திருந்தார்.
எனினும் இது குறித்து கருத்து வெளியிட்ட விமல் வீரவங்ச, அந்த ஒப்பந்தங்களைக் கவனத்தில் எடுப்பதற்குக் கூட தகுதியற்றது என்றும், எவராவது அவ்வாறான கருத்துக்களைத் தெரிவிப்பது அந்த ஒப்பந்தங்கள் தொடர்பில் எவ்வித புரிந்துணர்வும் இல்லாததாலாகும் எனத் தெரிவித்துள்ளார். குறித்த இரண்டு ஒப்பந்தங்களும் இந்நாட்டிற்கு பாதிப்பானது என்றும் விமல் வீரவங்ச சுட்டிக்காட்டியுள்ளார்.
#அமெரிக்கா #ஒப்பந்தங்கள் #கோட்டாபய ராஜபக்ஸ #விமல்வீரவங்ச #கெஹெலியரம்புக்வெல
Add Comment