
வெளிநாடுகளில் குற்றச்செயல்களில் ஈடுபடும் இலங்கையர்களுக்கெதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க ப்படமுடியுமென காவல்துறை ஊடகப் பேச்சாளரும் பிரதி காவல்துறைமா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
2006ஆம் ஆண்டு தண்டனைச் சட்ட திருத்தத்துக்கமைய, வெளிநாடுகளில் இலங்கையர்கள் மேற்கொள்ளும் குற்றச்செயல்கள், இலங்கையின் சட்டதிட்டத்திற்கமைய தவறாக காணப்படுமாயின் குற்றமிழைத்த இலங்கையர்களுக்கெதிராக இலங்கையில் சட்டநடவடிக்கை எடுக்க முடியும் என அவா்தெரிவித்துள்ளார்.
இலங்கையர் ஒருவர் ஜப்பான் யுவதியொருவரை கடத்திச் சென்றுள்ளமை தொடர்பில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் இன்று கலந்துகொண்ட போதே, அவா் இவ்வாறு தொிவித்துள்ளாா். #வெளிநாடுகளில் #குற்றச்செயல்களில் #இலங்கையர் #சட்டநடவடிக்கை
Spread the love
Add Comment