
திவிநெகும தொடர்பான வழக்கில் இருந்து முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஸ உள்ளிட்ட நால்வர் கொழும்பு மேல் நீதிமன்றத்தால் இன்றையதினம் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின்போது, திவிநெகும அபிவிருத்தி திணைக்களத்துக்கு சொந்தமான நிதியை முறைகேடாக பயன்படுத்திய சம்பவம் தொடர்பில் தொடரப்பட்டிருந்த வழக்கு தொடா்பிலே இவ்வாறு அவா்கள் விடுவிக்கப்பட்டுள்ளனா்.
முன்னதாக, இந்த வழக்கில் பசில் ராஜபக்ஸவுக்கு விதிக்கப்பட்டிருந்த வௌிநாட்டு பயணத் தடையும் மாதங்களுக்கு ஒரு தடவை குற்றப்புலனாய்வில் முன்னிலையாக வேண்டும் என விதிக்கப்பட்ட பிணை நிபந்தனையையும் கொழும்பு மேல் நீதிமன்றத்தினால் நீக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது #பசில்ராஜபக்ஸ #திவிநெகும #விடுதலை #ஜனாதிபதிதேர்தல்
Add Comment