
மதுபோதையில் நாக பாம்பை பிடித்தவர், அது தீண்டியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் வல்வெட்டித்துறை காவல்துறைப்பிரிவுக்கு உள்பட்ட வெளியன்தோட்டம் உடுப்பிட்டியில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது. மகேசன் தவம் (வயது-55) என்பவரே உயிரிழந்துள்ளார்.
நேற்றிரவு மதுபோதையில் வீட்டுக்கு வந்த அவர்,வீட்டினுள் நாக பாம்பு ஒன்றினை கண்டதும், அதனை பிடித்து. அயலில் உள்ள வளவில் வீசிவிட்டு தூக்கத்துக்குச் சென்றுள்ளார்.
தூக்கத்தால் திடீரென எழுந்த அந்த நபர், நெஞ்சு வலிப்பதால் குடிதண்ணீர் கேட்டுள்ளார். 3 செம்பு குடிதண்ணீரை அருந்திய அவர், தொடர்ந்தும் நெஞ்சு வலிப்பதாகக் கூறியுள்ளார். அதனால் வீட்டில் இருந்தோர், அவரை மந்திக்கை வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போது, அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது கையில் பாம்பு தீண்டிய அடையாளம் காணப்படுகின்றது என ஆரம்ப விசாரணைகளின் பின் காவல்துறையினர் தெரிவித்தனர். #மதுபோதை #உயிரிழப்பு #நாகபாம்பு #உடுப்பிட்டி
Add Comment