
சாவகச்சேரி பகுதியில் அமைந்துள்ள ஆலயத்தின் 50 வருடங்கள் பழமையான காண்டா(பிரதான) மணி திருடப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நுணாவில் மத்தி நாக பூசணி அம்மன் ஆலய மணியே திருடப்பட்டுள்ளது.
ஆலய மணிக் கோபுரத்திலிருந்த மணி இரவு திருடப்பட்டுள்ளது. காலை பூஜைக்கு ஆலயத்திற்கு பக்கதர்கள் சென்ற போதே மணி திருடப்பட்டமை தெரிய வந்துள்ளது.
அதனையடுத்து மணி திருட்டு போனமை தொடர்பில், சாவகச்சேரி காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள முறைப்பாட்டின் அடிப்படையில் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். #சாவகச்சேரி #காண்டாமணி #திருட்டு #நாகபூசணிஅம்மன்
Add Comment