இலங்கை பிரதான செய்திகள்

இணைப்பு 2- விமானப்படை விமானம் விபத்து – விமானி உயிாிழப்பு

இன்று இடம்பெற்ற இலங்கை விமானப்படைக்கு சொந்தமான விமான விபத்தில் விமானி உ யிாிழந்துள்ளதாகவும் அவரது சடலம் திருகோணமலை வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்துக்குள்ளாகிய விமானப்படை விமானம்

இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பயிற்சி விமானம் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமானிகளுக்கு பயிற்சி வழங்கும் PT – 6 ரக விமானம் ஒன்றே இவ்வாறு கந்தளாய் சூரியபுர  ஜனரஞ்சன குளத்துக்கு அருகில் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சீனக்குடா வான்படை முகாமிலிருந்து புறப்பட்ட குறித்த விமானத்தில் பயிற்சி விமானி மாத்திரமே பயணித்துள்ளதாகவும் விமானத்துக்குள் சிக்கியுள்ள விமானியை மீட்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது #விமானப்படை #விமானம் #விபத்து #விமானி

Spread the love
 
 
      

Add Comment

Click here to post a comment

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.