
நானொருதோணிக்காரன்
கரைக்கும் கரைக்கடலுக்கும்
தொட்டும் தொடாமலும்
என் பயணம்
சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாத
பயணம்
தோளுக்கும் நோகாமல்
ஆளுக்கும் நோகாமல்
சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாத
பயணம்
தோணிக்கும் வலிக்காமல்
ஆழிக்கும் வலிக்காமல்
நீரில் மிதக்கும் சாதாளைக்கும்
வலிக்காமல்
சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாத
பயணம்
காற்றும் கடலோட்டமும்
தீர்மானிக்கும்
என் பயணம்
சுனாமியும் சூறாவளியுமென்ன
சிறுசுழலும் தூற்றலுங்கூட
வராமல் காத்திருப்பாய்
என் தாயாரே
சவள்போட்டுச்சஞ்சலப்படுத்தாது
தோணியில் மிதத்தலே
பயணம்
கரைக்கும் கரைக்கடலுக்கும்
தொட்டும் தொடாமலும்.
கலாநிதி சி.ஜெயசங்கர்
Add Comment