இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் செயலாளருக்கு நாடாளுமன்ற சட்டங்களை ரத்து செய்ய முடிந்தால், நாடாளுமன்றம் எதற்கு?

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

இலங்கையில் அண்மைக் காலங்களில் இடம்பெறும் இதுபோன்ற சம்பவங்கள் நாடாளுமன்ற வரலாற்றில் ஒருபோதும் பதிவாகவில்லை. இது பாராளுமன்றத்தை அவமதிப்பதாகும். இந்த நிலையில் கட்சி  முரண்பாடுகளைப் பொருட்படுத்தாமல், நாடாளுமன்றத்தின் கௌரவத்தைப் பாதுகாக்க அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வர வேண்டும் என,   முன்னாள் சபாநாயகரும், ஒரு நியாயமான சமுதாயத்திற்கான தேசிய இயக்கத்தின் தலைவருமான தேசமண்யா கரு ஜெயசூரிய வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கொழும்பில் உள்ள ஜனகி நட்சத்திர விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில்  தொடர்ந்து கருத்து வெளியிட்ட அவர்,

“கடந்த சில நாட்களில் ஜனநாயகக் கொள்கைகளை கடுமையாக குறைமதிப்பிற்கு உட்படுத்திய பல சம்பவங்கள் நடந்துள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகித்த அரசியலமைப்பு சபையை அரசாங்கம் ஒழித்து அதனை நாடாளுமன்ற சபையுடன் மாற்றியது. இந்த நடவடிக்கை நாட்டின் அனைத்து முக்கிய நிறுவனங்களையும் கட்டுப்படுத்த  தனி ஒருவருக்கு  அதிகாரம் அளித்தது. எவ்வாறாயினும், இந்த  நடவடிக்கைகள் குறித்து  பொதுமக்களின் கருத்துகள்  சாதகமாக இருக்கவில்லை என்பதை அரசாங்கம் உணர வேண்டும்.

21 மில்லியன் மக்களின் வாழ்க்கையை ஒரு தனி நபரின் அதிகாரத்தின் கீழ் வைப்பதன் மூலம், ஜனநாயகத்தின் அடிப்படை தூண்கள் கடுமையாக பலவீனப்படுத்தப்பட்டுள்ளன. அனைவருக்கும் நீதி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை மக்கள் இழந்துவிட்டனர். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம் …

ஆயினும் கூட, 20 வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்ட அதிகாரங்களின்படி நியமிக்கப்பட்ட புதிய நாடாளுமன்ற சபை, நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து எழுந்த  எதிர்ப்புக்களை புறக்கணித்து அல்லது அடக்கு முறையின் கீழ்  ஏழு ஆணைக்குழுக்களுக்கும்  புதிய உறுப்பினர்களை நியமிக்க ஒப்புக் கொண்டுள்ளது. இந்த நடவடிக்கைகள் இந்த நாட்டு மக்களின் நல்ல நோக்கங்களை நிறைவேற்றுமா என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.

19 வது திருத்தத்தின் கீழ், நாட்டின் நிர்வாக தலைவர்  ஒருதலைப்பட்ச முடிவுகளை எடுக்க முடியவில்லை. உயர்மட்ட நியமனங்கள் தொடர்பாக நிபுணர்களுடன் பன்முக ஆலோசனை நடாத்துவதற்கு இடம்  இருந்தது. பொருத்தமற்ற நியமனங்களைத் தடுக்க ஏற்பாடுகள் இருந்தன. ஜனநாயக நாடுகள் பின்பற்றும் முறை இது. முழு அரசு எந்திரமும் சுயாதீன ஆணைக் குழுக்கிளின்  மூலம் கட்டுப்படுத்தப்பட்டன. அடிப்படை மனித உரிமைகள் உறுதிப்படுத்தப்பட்டன.

இருப்பினும், சமீபத்தில் ஆணைக்குழுக்களுக்கு  வழங்கப்பட்ட சில புதிய நியமனங்களைப் பார்க்கும்போது, ​​அவை சுயாதீனமாக இல்லை என்பதைக் காண்கிறோம். சுயாதீன அமைப்புகளுக்கு நபர்களை நியமிக்கும்போது, ​​பரிந்துரைக்கப்பட்டவர்கள் எந்தவொரு அரசியல் தொடர்பும் இல்லாதவர்களாக இருக்க வேண்டும். ஆனால் அது இன்று நடந்ததா?

பின்னோக்கிப் பார்த்தால், அப்போதைய  சுயாதீன நிறுவனங்கள் சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றன. மனித உரிமைகள் ஆணையம், தேர்தல் ஆணையம் மற்றும் தகவல் அறியும் ஆணையம் போன்ற நிறுவனங்கள் மிகவும் மதிக்கப்பட்டன.

COVID-19 தொற்றுநோய் போன்ற பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், முந்தைய பொதுத் தேர்தல் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்து சமீபத்திய தேர்தல்களும் சுதந்திரமாகவும் சுயாதீனமாகவும் இருந்தன. இவை  நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய உண்மை இது.

இந்த ஆணையங்களுக்கு மரியாதைக்குரிய உறுப்பினர்களை நியமிக்க நாடாளுமன்ற சபை சமீபத்தில் ஒப்புக் கொண்டது. இருப்பினும், சில பெயர்களைப் பார்க்கும்போது, ​​அரசியலில் தீவிரமாக ஈடுபட்டுள்ள பலரும்  உள்ளடக்கப்பட்டு இருப்பதைக் கண்டு நாங்கள் மிகவும் வருத்தப்பட்டோம். இதை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அந்த பெயர்களை நான் விரிவாகக் குறிப்பிட விரும்பவில்லை என்றாலும், அவை இப்போது ஊடகங்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன.

ஒரு சுயாதீனமான மற்றும் பக்கச்சார்பற்ற தேர்தல் நடத்தப்படாவிட்டால், காவல்துறை சேவையும் பொது சேவையும் அரசியல் மயமாக்கப்பட்டால், இலங்கையை ஜனநாயக நாடு என்று அழைக்க முடியாது. அத்தகைய சூழ்நிலையை மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

இது பாராளுமன்றத்திற்கு ஒரு அவமானம் மற்றும் அவமதிப்பு.

இந்தப் பின்னணியில், சர்வதேச சமூகத்தினரிடையே நமது நற்பெயர் கடுமையாக சேதமடையும். இது நம் நாட்டின் பொருளாதாரத்தில் மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். எனவே, இந்த ஆணைக்குழுக்களுக்கு  முன்மொழியப்பட்ட சில பெயர்களை மறுபரிசீலனை செய்யுமாறு அரசாங்கத்தை நாங்கள் கேட்டுக்கொள்கிறோம். இல்லையென்றால், பொதுமக்களிடமிருந்து இந்த நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை எதிர்கொள்ளக்கூடும். அது நடந்தால், ஆச்சரியப்பட வேண்டாம்.

அரசாங்கம் மற்றொரு தன்னிச்சையான செயலைச் செய்துள்ளது. ஜனாதிபதியின் செயலாளரின் உத்தரவின் பேரில் இலங்கையின் பொது பயன்பாட்டு ஆணையத்தை (பி.யூ.சி.எஸ்.எல்) அவர்கள் ரத்து செய்துள்ளது. இது சட்டவிரோதமானது மற்றும் ஒழுக்கக்கேடானது. பொது பயன்பாட்டு ஆணையம் நாடாளுமன்ற சட்டத்தால் உருவாக்கப்பட்டது. அத்தகைய ஒரு சட்டத்தை ரத்து செய்ய, அதை ரத்து செய்வதற்கான ஒரு திட்டத்தை முதலில் அமைச்சரவை ஒப்புதல் அளித்து அதன் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். அத்தகைய முக்கியமான மசோதாவை ஜனாதிபதியின் செயலாளர் ரத்து செய்ய முடிந்தால், நமக்கு  ஏன் நாடாளுமன்றம் வேண்டும்? இதனை  நாடாளுமன்றத்திற்கு அவமானமாகவும் அவமதிப்பாகவும் பார்க்கிறோம்.

பொது பயன்பாட்டு ஆணையத்தை உருவாக்குவதற்கான மசோதா 2002 ல் நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டபோது, ​​அப்போதைய மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சராக இருந்தபோது, ​​நான் அதை முழுமையாக ஆதரித்தேன். உலகின் வளர்ந்த நாடுகளில் இருந்த நல்ல உதாரணங்களை கணக்கில் எடுத்துக்கொண்டு, இந்த ஆணையத்தை உருவாக்க ஆசிய அபிவிருத்தி வங்கி (ஏடிபி) உட்பட பல நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு உதவின. இந்த சட்டம் பரவலாக  ஏற்றுக்கொள்ளப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழில் குளோபல் தமிழ்ச் செய்திகள்…

Spread the love

1 Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link