
இந்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என வலியுறுத்தி டெல்லியின் எல்லைகளில் விவசாயிகள் நடத்தும் போராட்டத்துக்கு ஆதரவாக திமுக கூட்டணிக் கட்சிகள் இன்று 8.00 மணி முதல் மாலை 5.00 வரை ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்துகின்றன.
சென்னை வள்ளுவர்க் கோட்டம் அருகே நடக்கும் இந்த உண்ணாவிரதத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று உரையாற்றியுள்ளாா்.
காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மதிமுக உள்ளிட்ட கட்சிகளும் அதன் தலைவா்களும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனா்.
கொரோனா காரணமாக 144 தடை உத்தரவு அமுலில் இருப்பதால் உண்ணாவிரதத்துக்கு காவல்துறையினா் அனுமதியளிக்கவில்லை என்ற போதிலும் உண்ணாவிரதப் போராட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது #விவசாயிகள் #போராட்டம் #ஆதரவு #திமுக #உண்ணாவிரதம் #வேளாண்சட்டங்களை
Add Comment