பிரதான செய்திகள் விளையாட்டு

சுரேஷ்ரெய்னா கைது

இந்திய அணி முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவை மும்பை இரவுவிடுதியொன்றில் வைத்து காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கொரோனா விதிகளை மீறி விடுதியில் நடைபெற்ற கேளிக்கை நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் கொரோனா விதிகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வரும் நிலையில், அங்கு இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், மும்பை விமான நிலையம் அருகே உள்ள விடுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுரேஷ் ரெய்னா, குரு ரந்தாவா, பொலிவுட் நடிகர் சூசன் கான் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்தநிலையில் அந்த விடுதியில் கொரோனா விதிகளை மீறியதாகக் கூறி ஏழு விடுதி ஊழியர்கள் உள்பட 34 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதைத்தொடர்ந்து சாஹர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட அனைவரும் பின்னர் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பணியில் இருந்த அரசு ஊழியருடன் ஒழுங்கீனமாக நடந்து கொண்டது, ஆபத்தை விளைவிக்கும் தொற்றுப்பரவல் வழிகாட்டுதல்களை அலட்சியப்படுத்தி பொது இடத்தில் கூடியது உள்ளிட்ட இந்திய தண்டனைச்சட்டம், பேரிடர் மேலாண்மை தடுப்புச் சட்டப்பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. #சுரேஷ்ரெய்னா #கைது #கொரோனா #இரவுவிடுதி

Spread the love

Add Comment

Click here to post a comment

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Share via
Copy link