
பண்டிகை காலத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டம் பிறப்பிப்பது குறித்து இதுவரையில் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று (22) காலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதுவரையில் தனிமைப்படுத்தப்படாதுள்ள பகுதிகளில் தேவை ஏற்படாத சந்தர்ப்பத்தில் தனிமைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சுகாதார பிரிவினர் தேவையான நடவடிக்கைகளை எடுப்பார்கள் எனத் தெரிவித்துள்ள அவர் ஜனாதிபதியின் அறிவுரையின் அடிப்படையில் தற்போதைக்கு போக்குவரத்து கட்டுபாடுகள் விதிக்க வேண்டிய தேவையும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். #பண்டிகை_காலத்தில் #ஊரடங்கு #சவேந்திரசில்வா #தனிமைப்படுத்தல்
Spread the love
Add Comment