இலங்கை பிரதான செய்திகள்

பல்கலை மாணவா்களின் அடிப்படை உரிமை மனுக்கள் தள்ளுபடி

2019 ஆம் ஆண்டு உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் பல்கலைகழக வெட்டுப்புள்ளியின் (Z Score) அடிப்படையில் பொறியியல் மற்றும் பௌதீகவியல் பீடங்களுக்கு மாணவர்கள் அனுமதிக்கப்படுவதை தடுக்க கோரி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் விசாரணையின்றி தள்ளுபடி செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது.

2019 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சையில் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் சித்தியடைந்த 42 மாணவர்களினால் தாக்கல் செய்யப்பட்டிருந்த குறித்த மனுக்கள் உயர் நீதிமன்ற நீதிபதிகளான புவனெக அலுவிகார, எஸ். துரைராஜா மற்றும் யசந்த கோதாகொட ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டிருந்த நிலையில் பெரும்பான்மையான நீதியசர்களின் தீர்மானத்திற்கு அமைய மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்த மனுக்களின் பிரதிவாதிகளாக கல்வி அமைச்சர், கல்வி அமைச்சின் செயலாளர், பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் சட்ட மா அதிபர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #பல்கலை_மாணவா்களின் #அடிப்படைஉரிமை #தள்ளுபடி #வெட்டுப்புள்ளி #பொறியியல்

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.