இலங்கை பிரதான செய்திகள்

சுற்றிவளைப்பின் போது ஒருவர் உயிரிழப்பு

காவல்துறையினாினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது வெயங்கொடை பிரதேசத்தில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

கடந்த 19 ஆம் திகதி வெயாங்கொடை மாளிகாதென்ன பிரதேசத்தில் நபரொருவரை துண்டுத் துண்டாக வெட்டி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்த ஒருவரே இவ்வாறு உயிாிழந்துள்ளாா்.

சில கொள்ளைச் சம்பவங்களுடனும் தொடர்புடைய குறித்த நபரையும் இணைத்துக் கொண்டு இன்று காலை சுற்றிவளைப்பொன்றிற்காக பேலியகொடை குற்றவியல் பிரிவின் அதிகாரிகள் குழுவொன்று வெயாங்கொடை காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட ஹல்கம்பிடிய பிரதேசத்திற்கு சென்றிருந்தனர்.

அங்கு இடம்பெற்ற சம்பவம் ஒன்றினை தொடர்ந்து குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கபபட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளாா்.

குறித்த சந்தேகநபரின் செயற்பாடுகள் காரணமாக காவல்துறைஅதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார் என காவல்துறை ஊடக பேச்சாளர் பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். #சுற்றிவளைப்பு #உயிரிழப்பு #கொள்ளை #அஜித்_ரோஹண

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.