
பிரபல மல்யுத்த வீரா் லூக் ஹார்ப்பர் உயிாிழந்துள்ளாா். உலக அளவில் மிகவும் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான மல்யுத்தம் விளையாட்டில் உள்ள பிரபலமான வீரர்களில் லூக் ஹார்ப்பரும் ஒருவராவாா். ’வயட் பெம்லி’ என்ற குழுவுடன் இணைந்து மல்யுத்தத்தில் பங்கேற்றுவந்த இவர் பின்னர் தனியாகவே போட்டிகளில் பங்கேற்று வந்தார்.
ஜானத்தன் ஹுபர் எனும் நிஜப் பெயரைக் கொண்ட 41 வயதான லூக் ஹார்ப்பா் மல்யுத்த விளையாட்டில் பல்வேறு வெற்றிகளை பெற்றுள்ளார். இவர் 2019 ஆம் ஆண்டு டபுள்யூ டபுள்யூ இ (WWE) மல்யுத்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.
இந்நிலையில், நுரையீரல் பாதிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்த லூக் ஹார்ப்பர் நேற்றையதினம் உயிரிழந்துள்ளாா் என தொிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை அவரது மனைவி அமேண்டா உறுதிபடுத்தியுள்ளார். #பிரபல #மல்யுத்த_வீரா் #லூக்ஹார்ப்பர்
Spread the love
Add Comment