
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கடத்தப்பட்ட தேரர் ஒருவருடைய சடலம் கொட்டதெனியாவ நாவான மயானத்தில் நேற்று(04) கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது
65 வயதுடைய உடுவில தம்மசிறி தேரர், தனிப்பட்ட விரோதம் காரணமாக கடத்திச் செல்லப்பட்டுள்ள கொல்லப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பில் பெண்ணொருவர் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரதி காவல்துறை மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
மினுவாங்கொடை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய நீர்கொழும்பு வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி மரண விசாரணைகளை இன்று முன்னெடுக்கவுள்ளதாக ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
சந்தேக நபர்களை அவிசாவளை நீதிமன்றில் இன்று(05) முன்னிலைப்படுத்தி 48 மணிநேரம் தடுத்துவைத்து விசாரிக்கும் உத்தரவை பெற்றுக்கொள்ள காவல்துறையினா் நடவடிக்கை எடுத்துள்ளனர். #தேரர் #கடத்தப்பட்டு #கொலை #விரோதம்
Add Comment