
ஒன்றுபட்ட இலங்கைக்குள் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது, இலங்கையின் எதிர்காலத்துக்கு நன்மை பயக்கும் என, உத்தியோகபூர்வ பயணமாக இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
13 ஆவது அரசியல் திருத்தம் உள்ளிட்ட அதிகாரப் பகிர்வு குறித்த விடயங்களுக்கும் இலங்கை அரசாங்கத்தின் உறுதிப்பாட்டுக்கும் இது பொருத்தமானதாக இருக்கும் எனவும் அவா் தெரிவித்துள்ளார்.
இன்றையதினம் வெளிவிவகார அமைச்சில், அமைச்சர் தினேஸ் குணவர்தனவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். #தமிழா்களின் #அபிலாஷைகளை #இலங்கையின் #நன்மை_பயக்கும் #ஜெய்சங்கர்
இலங்கைக்கான ஒவ்வொரு விஜயத்தின் போதும் இந்தியா தமிழர்களை ஆதரித்து அறிக்கை வெளியிட்டு வருவது வழக்கம். ஆனால் தமிழர்களின் பிரச்சினைகளோ தீர்க்கப்படாமல் தொடர்கிறது.